வெங்காய சாதம் – Onion Rice Recipe in Tamil


வெங்காய சாதம் மிகவும் சுவையான உணவு. இதை வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

மிகவும் சுவையான உணவை குறைந்த நேரத்தில் சமைத்து உண்டு மகிழ்வது யாருக்குத்தான் பிடிக்காது? அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது பாசுமதி அரிசி, வெங்காயம், மற்றும் வேர்கடலை கொண்டு குறைந்த நேரத்தில் மிகுந்த எளிமையான முறையில் செய்யப்படும் வெங்காய சாதம். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான வெங்காய சாதம் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும். 

Onion Rice

Onion Rice

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்: 

நாம் அனைவரிடமும் அவசர காலகட்டத்தில் குறுகிய நேரத்தில் செய்து முடிப்பதற்கு ஏற்ப உணவு பட்டியல் இருக்கும். அந்தப் பட்டியலில் நாம் இந்த வெங்காய சாதத்தை சேர்த்துக் கொள்ளலாம். அவசர வேளையில் நாம் காலையில் அலுவலகங்களுக்கு கிளம்பி செல்லும்போது அல்லது நம் பிள்ளைகளுக்கு குறைந்த நேரத்தில் மதிய உணவை தயார் செய்து ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்புவதற்கு இந்த வெங்காய சாதம் மிகவும் உகந்தது. இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

நன்கு வறுத்த வேர்க்கடலை மற்றும் கடலைப்பருப்புடன் நாம் சேர்க்கும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், கடுகு, பெருங்காய தூள், மற்றும் புளி தண்ணீர் போன்ற சுவையூட்டிகள் நன்கு ஒன்றோடு ஒன்று கலந்து ஒரு அருமையான கலவை ஆகி இருக்கும். அதனுடன் நாம் சேர்க்கும் உலர்ந்த பாசுமதி அரிசி ஒரு அசத்தலான உணவு உண்ணும் அனுபவத்தை நமக்கு ஏற்படுத்தும்.

சில குறிப்புகள்: 

பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டால் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும.

பாசுமதி அரிசியை முதலில் முக்கால் பாகம் (20 லிருந்து 25 நிமிடம்) மட்டும் வேக வைக்கவும். சாதம் வெந்ததும் தண்ணீரை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும். அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால் தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். 

பூண்டை அதிகம் விரும்பாதவர்கள் ரெண்டு அல்லது மூன்று பல் பூண்டை மட்டும் பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

இவ் உணவின் வரலாறு:

இந்த வெங்காய சாதம் மத்திய கிழக்கு அல்லது மத்திய ஆசியாவில் உதயமாகியிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இவை சவுதி அரேபியா அல்லது பக்ரைன் நாடுகளில் உதயமாகி இருக்கலாம் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றன. இன்றைக்கும் சவுதி அரேபியாவில் இந்த வெங்காய சாதம் Mahmous என்ற பெயரில் செய்து மக்களால் சுவைக்கப்படுகிறது. காலப்போக்கில் இந்த வெங்காய சாதம் மெல்ல மெல்ல உலகம் முழுவதும் அந்தந்த பகுதிக்கேற்ற உணவு முறையின் படி மக்களால் செய்து சுவைக்கப்படுகிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

வெங்காய சாதம் செய்ய தயாரிப்பு பணிகள் மேற்கொள்ள சுமார் 5 லிருந்து 10 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 15 லிருந்து 20 நிமிடம் எடுக்கும். 

வெங்காய சாதத்தை முழுமையாக சுமார் 25 நிமிடத்தில் இருந்து 30 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

இதை ஒற்றிய உணவுகள்: 

  • தக்காளி சாதம்
  • புதினா சாதம்
  • தேங்காய் சாதம்
  • பூண்டு சாதம்
  • எலுமிச்சை சாதம்
  • கேரட் சாதம்

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்: 

வெங்காய சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது. 

நாம் இதில் சேர்க்கும் கடலை பருப்பில் புரத சத்து, நார் சத்து, மற்றும் விட்டமின் B இருக்கிறது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் கடுகில் இரும்பு சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், காப்பர், ஜிங்க், விட்டமின் A, C, மற்றும் Okay உள்ளது.

இதில் நாம் சேர்க்கும் சீரகத்தில் இரும்பு சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

 

Onion Rice