ஒரு மாறுதலுக்காக இந்த மிகுந்த சுவையான தக்காளி தோசையை செய்து உங்கள் குடும்பத்தினரை மகிழ வையுங்கள்
தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். அதுமட்டுமின்றி தோசை உடல் பருமனை அதிகரிக்கும் பொருட்களையோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருட்களையோ கொண்டவை அல்ல.
மேலும் இவை எளிமையான மற்றும் எளிதாக செய்து முடிக்க கூடிய ஒரு உணவு வகை. தோசையில் பல வகை உண்டு அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகுந்த சுவையான மற்றும் வித்தியாசமான தக்காளி தோசை. என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்கும் ஒரு சுவாரசியமான தோசையின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.
ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:
பொதுவாக நம் காலை உணவாக சாதா தோசை அல்லது ரவை தோசையை தான் நம்மில் பல பேர் வழக்கமாக நம் குடும்பத்தினருக்கு செய்து கொடுத்து இருப்போம். நீங்கள் வழக்கமாக செய்யும் தோசைக்கு ஒரு நாள் விடுப்பு கொடுத்துவிட்டு, ஒரு மாறுதலுக்காக இந்த மிகுந்த சுவையான தக்காளி தோசையை செய்து உங்கள் குடும்பத்தினரை மகிழ வையுங்கள். அவர்கள் நிச்சயமாக அசந்து போவார்கள்.
ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:
பொதுவாகவே மனிதர்களாகிய நாம் எதிலும் ஒரு மாற்றத்தை விரும்பக் கூடியவர்கள். குறிப்பாக உணவுகளில். அவ்வாறு இருக்கையில் சாதா தோசையை உண்டு சோர்ந்து போயிருக்கும் நம் நா சுவை அரும்புகளை இந்த அருமையான தக்காளி தோசை தட்டி எழுப்பும். இவை செய்வதற்கும் மிக எளிமையானவை ஏனெனில் சாதா தோசைக்கி அரிசி மற்றும் உளுந்தை சுமார் 8 லிருந்து 10 மணி நேரம் வரை நாம் ஊற வைப்பது போல் இதற்கு ஊற வைக்க வேண்டாம். வெறும் ரெண்டு மணி நேரமே போதுமானதாகும். இதனால் நாம் தக்காளி தோசையை இன்ஸ்டண்டாக செய்ய முடியும்.
சில குறிப்புகள்:
தோசை மாவு அரைக்கும் போது முதலிலேயே அதிகமாக தண்ணீர் ஊற்றி விடாமல் மாவு நன்கு கொறகொறப்பு பதத்தில் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு நைசாக அரைக்கவும்.
தோசை மாவு ரொம்ப தண்ணியாக ஆகி விடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளவும். அரைத்த மாவு ஒரு மணி நேரம் ஊறிய பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அதை கரைத்துக் கொள்ளவும்.
தோசை சுடுவதற்கு நெய்யை விரும்பாதவர்கள் எண்ணையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ் உணவின் வரலாறு:
தோசை தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் ஒன்றாம் நூற்றாண்டின் போது உதயமானது என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப காலகட்டங்களில் தோசை ஒரு பண்டிகை கால உணவாக மட்டுமே பலராலும் செய்து குடும்பத்தினரோடு சேர்ந்து உண்டு கொண்டாடப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் தோசை தினசரி உணவுகளில் ஒன்றாக மாறி இருக்கிறது.
தமிழ்நாட்டில் உருவான தோசை மெல்ல மெல்ல இந்தியா முழுவதும் பரவி பின்பு ஆசிய கண்டம் மற்றும் ஐரோப்பா வரை சென்றடைந்திருக்கிறது. எந்த அளவுக்கு இவை பிரபலம் என்றால் நியூயார்க் நகரத்தில் ‘தி தோச மேன்’ என்கின்ற ஒரு உணவு வியாபாரிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகும் அளவிற்கு இவை பிரபலமடைந்திருக்கிறது.
செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:
தக்காளி தோசையை சுமார் 20 லிருந்து 25 நிமிடத்திற்குள் செய்து முடித்து விடலாம்.
நாம் தயாரிக்கும் தக்காளி தோசை மாவை சுமார் ரெண்டு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதை சுமார் 3 லிருந்து 4 பேர் வரை தாராளமாக உண்ணலாம்.
இதை ஒற்றிய உணவுகள்:
இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:
தக்காளி தோசை செய்வதற்கு நாம் பயன்படுத்தும் அரிசி மாவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து இருக்கிறது.
இதில் நாம் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், விட்டமின் C மற்றும் Ok உள்ளது.
இதில் நாம் பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, மற்றும் கால்சியம் உள்ளது.
தக்காளி தோசை
ஒரு மாறுதலுக்காக இந்த மிகுந்த சுவையான தக்காளி தோசையை செய்து உங்கள் குடும்பத்தினரை மகிழ வையுங்கள்
தேவையான பொருட்கள்
- 3/4 cup கப் அரிசி
- 1/2 cup உளுத்தம் பருப்பு
- 3 தக்காளி
- 6 காய்ந்த மிளகாய்
- 2 பூண்டு பல்
- தேவையான அளவு கொத்தமல்லி
- 1/2 tblsp கல்லுப்பு
- தேவையான அளவு நெய்
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
-
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
-
அடுத்த தக்காளி மற்றும் பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
-
2 மணி நேரம் கழித்து தண்ணியை நன்கு வடித்து அதை மிக்ஸியில் போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பூண்டு, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், மற்றும் கல்லுப்பை போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
-
இப்பொழுது அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து சுமார் ஒரு மணி நேரம் வரை நன்கு ஊற வைக்கவும்.
-
ஒரு மணி நேரம் கழித்து அந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அதை கரைத்துக் கொள்ளவும்.
-
அடுத்து pan ஐ அடுப்பில் வைத்து அதில் அரை ஸ்பூன் அளவு நெய் விட்டு அதை சூடாக்கவும்.
-
Pan சுட்டவுடன் அதில் தோசையை ஊற்றி அதை சுற்றி ஒரு ஸ்பூன் அளவு நெய் விட்டு சற்று நேரம் வேக விடவும்.
-
தோசை லேசாக பொன்னிறம் ஆனதும் அதை திருப்பிப் போட்டு சற்று நேரம் வேக விடவும்.
-
தோசை வெந்ததும் அதை சுடச்சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் அதை பரிமாறவும்.
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:
தக்காளி தோசைக்கு தொட்டுக் கொள்வதற்கு ஏற்ற சட்னிகள் எவை?
தக்காளி தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மற்றும் புதினா சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும்.
தக்காளி தோசையை இன்னும் காரமாக்கிக் கொள்ளலாமா?
தாராளமாக ஆக்கிக் கொள்ளலாம். காரமாக்குவதற்கு கூடுதலாக 2 லிருந்து 4 காய்ந்த மிளகாய் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம்.
தக்காளி தோசையுடன் மசாலாவை சேர்த்து தக்காளி மசால் தோசையாக ஆக்கிக் கொள்ளலாமா?
ஆக்கிக் கொள்ளலாம். நாம் வழக்கமாக மசால் தோசைக்கு செய்யும் மசாலாவை தயாரித்து அதையே தக்காளி மசால் தோசை செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
கூடுதலாக தக்காளி தோசையில் ஏதேனும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாமா?
நீங்கள் விருப்பப்பட்டால் கேரட் மற்றும் வெங்காயத்தை நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
Leave a Reply