எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ் மிகவும் சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகும். இதை மிக எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி முதல் முறையிலேயே செய்து விடலாம். இதை செய்ய அதிக பொருட்களும் தேவைப்படாது.
உலகத்தில் சாக்லேட்டை விரும்பாத குழந்தைகள் வெகு சிலர் ஆகத்தான் இருப்பார்கள். சாக்லேட்டுகளுக்கு அடுத்தபடி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு என்றால் அது ஏறத்தாழ பிஸ்கட் ஆகத்தான் இருக்கும். அவ்வாறு இருக்கையில் சாக்லேட் மற்றும் பிஸ்கட்டை ஒரு உணவாக மாற்றி நாம் அவர்களுக்கு வழங்கினால் குழந்தைகள் அளவற்ற மகிழ்ச்சி அடைவார்கள். அந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்ஸை எப்படி செய்வது என்று தான் நாம் இன்று இங்கு காண போகிறோம்.
என்ன உங்களுக்கே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான சாக்லேட் சிப் குக்கீஸ்ஸின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.
ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:
நம்மில் பல பேர் நம் குழந்தைகளுக்கு பெரும்பாலும் சாயங்கால சிற்றுண்டியாக கடைகளில் கிடைக்கும் பிராசஸ் செய்யப்பட்ட பிஸ்கட்களை வாங்கி கொடுப்போம். அதற்கு ஒரு மாற்றாக நாம் நம் பிள்ளைகளுக்கு நம் வீட்டிலேயே இந்த அட்டகாசமான எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்ஸை ஆரோக்கியமான முறையில் செய்து கொடுக்கலாம்.
இதில் ஒரு கூடுதல் லாபம் என்னவென்றால் நாம் இதில் முட்டை சேர்க்காததால் அசைவ உணவுகளை உணவு பழக்கத்திலிருந்து தவிர்ப்பவர்கள் கூட இந்த எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்ஸை சாப்பிடலாம். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.
ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:
எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ் செய்ய நாம் பயன்படுத்தும் மைதா மாவு, சோள மாவு, சர்க்கரை, மற்றும் நாட்டு சர்க்கரை நன்கு பால், உப்பு சேர்க்காத வெண்ணெய், மற்றும் வெண்ணிலா எசன்ஸ்ஸுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து வெந்து அற்புதமாக இருக்கும்.
அதனுடன் இருக்கும் சாக்லேட் சிப் வேற லெவல் சுவையை நமக்கு ஏற்படுத்தும். மீண்டும் மீண்டும் இந்த எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்ஸை நமக்கு சுவைக்க தோன்றும். இதை வெறும் சிறுவர்கள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் பெரியவர்களும் மிகவும் விரும்பி உண்பார்கள். அதற்கு நாங்கள் கேரண்டி.
சில குறிப்புகள்:
மைதா மாவு, சோள மாவு, உப்பு, மற்றும் பேக்கிங் சோடாவை ஒரு சல்லடையின் மூலம் சலித்து கொண்டால் அதில் இருக்கும் சிறு சிறு கட்டிகள் நீங்கி மாவு நன்கு நைசாக இருக்கும்.
சாக்லேட் சிப் குக்கீ செய்ய நாம் பிசையும் மாவு கோதுமை மாவு பதத்திற்கு வர நாம் ஊற்றும் பாலே பெரும்பாலும் போதுமானதாக இருக்கும். கூடுதலாக தண்ணீர் தேவைப்படாது. ஒருவேளை மாவு சற்று டிரையாக இருந்தால் கவனமாக தண்ணீரைத் தெளித்து அதை கோதுமை மாவு பக்குவத்திற்க்கு பிசைந்து கொள்ளுங்கள்.
இவ் உணவின் வரலாறு:
சாக்லேட் சிப் குக்கீஸ் முதல்முறையாக அமெரிக்காவில் 1938 ஆம் ஆண்டில் Massachusetts என்கின்ற மாகாணத்தில் உள்ள Whitman என்கின்ற பகுதியில் Toll Space Inn என்கின்ற உணவு விடுதி நடத்திக் கொண்டிருந்த Ruth Graves Wakefield என்கின்ற அமெரிக்க செஃப் ஆல் செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த சர்வதேச நிறுவனமான நெஸ்ட்லே இந்த சாக்லேட் சிப் குக்கீஸ் ஆல் மிகவும் கவரப்பட்டு Ruth Graves Wakefield இடம் இருந்து இதற்கான ரெசிபியை பெற்றார்கள். அதற்கான சன்மானமாக வாழ்நாள் முழுவதும் Ruth Graves Wakefield க்கு இலவசமாக சாக்லேட்டுகளை அந்நிறுவனம் வழங்கியது. பின்னர் அந்நிறுவனம் இந்த சாக்லேட் சிப் குக்கீஸ்ஸை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது.
செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:
எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.
இதை சமைக்க சுமார் 55 லிருந்து 60 நிமிடம் எடுக்கும்.
எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்ஸை முழுமையாக சுமார் 70 நிமிடத்தில் இருந்து 75 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.
இதை சுமார் நான்கில் இருந்து ஐந்து பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.
எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்ஸை செய்து முடித்தவுடன் ஒரு ஏர் டைட் கன்டெய்னரில் போட்டு விட்டால் அதை சுமார் 2 மாதம் வரை வைத்து உண்ணலாம்.
இதை ஒற்றிய உணவுகள்:
- தேங்காய் பிஸ்கட்
- நெய் பிஸ்கட்
- பட்டர் பிஸ்கட்
- ஓட்ஸ் பிஸ்கட்
- சாண்ட்விச் பிஸ்கட்
- இஞ்சி பிஸ்கட்
இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:
எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ் செய்ய நாம் உபயோகிக்கும் மைதா மாவில் புரத சத்து, நார் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
இதில் நாம் சேர்க்கும் சோள மாவில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, தண்ணீர் சத்து, பொட்டாசியம், மற்றும் கால்சியம் உள்ளது.
நாம் இதில் சேர்க்கும் பாலில் புரத சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், மற்றும் விட்டமின் B 12 இருக்கிறது. இவை எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்க்கு உதவுகிறது.
நாம் இதில் பயன்படுத்தும் உப்பு சேர்க்காத வெண்ணெய்யில் புரத சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், பொட்டாசியம், விட்டமின் D, A, E, மற்றும் K2 உள்ளது. இவை எலும்பு மற்றும் இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
இதில் நாம் பயன்படுத்தும் நாட்டு சர்க்கரையில் இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்
எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ் மிகவும் சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகும். இதை மிக எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி முதல் முறையிலேயே செய்து விடலாம். இதை செய்ய அதிக பொருட்களும் தேவைப்படாது.
தேவையான பொருட்கள்
- 1 1/2 cups மைதா மாவு
- 1/2 cup சாக்லேட் சிப்ஸ்
- 1/4 cup சர்க்கரை
- 1/2 cup உப்பு சேர்க்காத வெண்ணெய்
- 1/2 cup நாட்டு சர்க்கரை
- 1/4 cup பால்
- 2 tsp சோள மாவு
- 1 tsp வெண்ணிலா எசன்ஸ்
- 1/2 tsp பேக்கிங் சோடா
- 1/2 tsp உப்பு
- தேவையான அளவு பட்டர் பேப்பர்
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அதை சுட வைத்து சற்று நேரம் ஆறவிடவும்.
-
இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மற்றும் பேக்கிங் சோடாவை ஒரு சல்லடையின் மூலம் சலித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
-
அடுத்து மற்றொரு bowl லில் சர்க்கரை, நாட்டு சர்க்கரை, மற்றும் உப்பு சேர்க்காத வெண்ணெய்யை சேர்த்து அதை நன்கு அடித்து க்ரீமாக ஆக்கிக் கொள்ளவும்.
-
பின்பு அதில் வெண்ணிலா எசன்ஸ், பாதி அளவு சாக்லேட் சிப்ஸ், மற்றும் நாம் சலித்து வைத்திருக்கும் மாவு கலவையில் பாதியை சேர்த்து அதை பக்குவமாக சாக்லேட் சிப்ஸ்கள் உடைந்து விடாதவாறு நன்கு கிளறி விடவும்.
-
இப்பொழுது நாம் சுட வைத்து ஆற வைத்திருக்கும் பாலில் பாதியை இதில் சேர்த்து அதை பக்குவமாக நன்கு கிளறி விடவும்.
-
அடுத்து மீதமுள்ள மாவு கலவையை முழுமையாக சேர்த்து அதனுடன் மீதமுள்ள சாக்லேட் சிப்ஸ்களில் பாதியை சேர்த்து பக்குவமாக நன்கு கலந்து விடவும்.
-
பின்பு மீதமுள்ள பாலையும் ஊற்றி அதை நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு வரும் வரை பிணைந்து கொள்ளவும்.
-
சப்பாத்தி மாவு பதம் வந்ததும் அதை அப்படியே எடுத்து சுமார் அரை மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
-
இப்பொழுது ஓவன் டிரேவை எடுத்து அதில் பட்டர் பேப்பர்களை விரித்து வைக்கவும்.
-
30 நிமிடத்திற்க்குப் பிறகு ஃப்ரிட்ஜில் இருக்கும் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி டிரேயில் நாம் விரித்து வைத்த பட்டர் பேப்பரின் மீது வைக்கவும்.
-
அடுத்து அந்த கலவைகளை பிஸ்கட் வடிவிற்கு தட்டி அதன் மேலே மீதம் உள்ள சாக்லேட் சிப்ஸ்களை வைக்கவும்.
-
பின்பு ஓவனை சுமார் 15 நிமிடம் வரை 180 டிகிரி செல்சியஸில் சுட வைக்கவும்.
-
15 நிமிடத்திற்க்கு பிறகு இந்த டிரேவை ஓவனில் வைத்து அதை சுமார் 20 நிமிடம் வரை 180 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும்.
-
20 நிமிடத்திற்க்குப் பிறகு டிரேவை ஓவனிலிருந்து எடுத்து சற்று நேரம் ஆறவிட்டு இந்த எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்ஸை வீட்டில் இருக்கும் உங்கள் குட்டீஸோடு சுவைத்து மகிழுங்கள்.
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:
எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்ஸில் கூடுதலாக நாம் சாக்லேட் சிப்ஸ்களை சேர்க்கலாமா?
உங்களுக்கு சாக்லேட் சிப்ஸ் மிகவும் பிடிக்கும் என்றால் உங்களின் விருப்பத்திற்க்கு ஏற்ப சாக்லேட் சிப்ஸ்களை சேர்த்துக் கொள்ளலாம்.
எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்ஸை வெறும் சாதா சர்க்கரையை பயன்படுத்தி செய்யலாமா?
செய்யலாம். ஆனால் நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தினால் தான் சாக்லேட் சிப் குக்கீயிற்கான முழுமையான சுவையை நம்மால் அடைய முடியும்.
இந்த சாக்லேட் சிப் குக்கீயில் நாம் முட்டையை சேர்த்துக் கொள்ளலாமா?
உங்களுக்கு வேண்டும் என்றால் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். மாவை பிசைவதற்க்கு முன்பு முட்டையை உடைத்து ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்ஸை செய்வதற்கான மாவு கலவையை முந்தைய நாள் இரவே தயார் செய்து வைத்து விடலாமா?
கூடாது. நாம் எப்பொழுது எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்ஸை செய்கிறோமோ அதற்கு முன்பாக தான் இந்த மாவு கலவையை நாம் தயார் செய்ய வேண்டும்.
எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்ஸை கோதுமை மாவை பயன்படுத்தி செய்யலாமா?
தாராளமாக செய்யலாம். இருப்பினும் மைதா மாவில் செய்வது தான் சுவையாக இருக்கும்.
Leave a Reply