வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட்


வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட் மிகவும் அசத்தலான மாலை நேர சிற்றுண்டி. இதை குறைந்த நேரத்திலேயே மிக எளிதாக செய்து விடலாம். இதை செய்ய அதிக பொருட்க்களும் தேவைப்படாது.

வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட் ஒரு ஜாக்பாட் உணவு. குறைந்த நேரத்தில், குறைந்த பொருட்க்களை வைத்து மிக எளிதில் செய்யக்கூடிய ஒரு உணவு மிகவும் சுவையாக இருந்தால் அது ஜாக்பாட் தானே? அதுவும் அந்த உணவு நன்கு ரிச் அண்ட் கீரீமியாக இருந்தால்? டபுள் ஜாக்பாட். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Veg Corn Chilli Cheese Toast / வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட்

Veg Corn Chilli Cheese Toast / வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட்

 

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

பண்டிகை காலங்கள், பிறந்தநாள் விழாக்கள், அல்லது குடும்ப கெட்டுகெதர்களின் போது ஏதேனும் ஒரு வித்தியாசமான உணவை செய்து நாம் விருந்தினர்களை அசத்த வேண்டும் என்று நம்மில் பல பேர் எண்ணுவது வழக்கமே. அது போன்ற தருணங்களுக்கு மிக எளிதில் செய்யக்கூடிய இந்த வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட் மிகவும் ஏற்ற உணவு. இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

நாம் இந்த வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட்டில் சேர்க்கும் அவித்த சோள விதைகளை, வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் கொத்தமல்லி, நாம் சேர்க்கும் மிளகு தூள், ரெட் சில்லி ஃப்ளெக்ஸ், மற்றும் இத்தாலியன் சீசனிங் போன்ற சுவையூட்டிகளுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து படுக்கச்சிதமாக இருக்கும். சீஸ் ஏற்படுத்தும் கீரீமியான சுவை மற்றும் பிரட் டோஸ்ட் ஏற்படுத்தும் கிரிஸ்பியான சுவையின் காம்பினேஷனே தனி தான். மிக சொற்பமானவர்களே இந்த வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட்டை விரும்பாமல் இருப்பார்கள்.

சில குறிப்புகள்:

வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட்டை pan னில் மூடி போட்டு டோஸ்ட் செய்வதற்கு முன்னால் pan னின் உள்ளே ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணியை வைத்து pan னை மூடினால் தண்ணீரில் இருந்து வரும் ஆவி டோஸ்ட்டை நன்கு வேக வைக்க உதவும்.

நீங்கள் பயன்படுத்தும் மொஸரெல்லா சீஸ் அல்லது வேறு ஏதேனும் சீஸ்ஸை பயன்படுத்தினால் அது நன்கு பிரஷ்ஷாக இருப்பதை உறுதி செய்யவும். ஏனென்றால் சீஸ் தான் இந்த ஒட்டுமொத்த டோஸ்ட்டின் சுவையை உறுதி செய்யும்.

இவ் உணவின் வரலாறு:

சீஸ் டோஸ்ட் 1912 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள Lancaster என்கின்ற நகரத்தில் உள்ள Halton என்கின்ற பகுதியில் Wilf Chumbly என்கின்ற நபரால் முதல் முறையாக சமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்பு 1970 ஆம் ஆண்டில் மும்பையில் இந்த சீஸ் டோஸ்ட்டை இந்திய சமையல் முறைகேற்ப மாற்ற முயன்ற போது ‘சில்லி சீஸ் டோஸ்ட்’ என்கின்ற புதிய உணவு உதயமானதாக வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. காலப்போக்கில் இவை உலகம் முழுவதும் மிகப் பிரபலம் அடைந்து விட்டது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 10 லிருந்து 15 நிமிடம் எடுக்கும்.

வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட்டை முழுமையாக சுமார் 25 நிமிடத்தில் இருந்து 30 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட்டை செய்யும் நாள் அன்றே உண்டு விட வேண்டும்.

இதை ஒற்றிய உணவுகள்:

  • சிக்கன் சீஸ் டோஸ்ட்
  • பிரெஞ்சு சீஸ் டோஸ்ட்
  • சில்லி சீஸ் டோஸ்ட்
  • முட்டை சீஸ் டோஸ்ட்
  • மசாலா சீஸ் டோஸ்ட்
  • கிரில்டு சீஸ் டோஸ்ட்

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட் செய்ய நாம் பயன்படுத்தும் கோதுமை பிரட்டில் புரத சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மற்றும் சோடியம் இருக்கிறது.

நாம் சேர்க்கும் வேகவைத்த சோளத்தில் புரத சத்து, நார் சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கொழுப்பு சத்து உள்ளது.

நாம் சேர்க்கும் குடை மிளகாயில் விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை இதயம், கண், மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் மொஸரெல்லா சீஸ்ஸில் புரத சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், விட்டமின் D மற்றும் B6 உள்ளது.

Veg Corn Chilli Cheese Toast / வெஜ் கார்ன் சில்லி சீஸ் டோஸ்ட்