செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி தென் தமிழகத்தில் ஒரு பிரபலமான உணவு. மணமான மற்றும் சுவையான இந்த செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி உங்களுக்கு ஒரு அற்புதமான உணவு உண்ணும் அனுபவத்தை ஏற்படுத்தும்.
பிரியாணி யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் குறிப்பாக இந்தியாவில்? பிரியாணிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அவ்வாறான பிரியாணி பிரியர்களுக்காக நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி. என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.
ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:
பிரியாணி ஆரம்ப காலகட்டத்தில் ரெண்டு அல்லது மூன்று முறையில் செய்து சுவைக்க பட்டுக் கொண்டிருந்தது. காலப்போக்கில் பலவிதமான முறைகளில் பிரியாணி செய்து சுவைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி நாம் வழக்கமாக செய்து உண்ணும் பிரியாணிகளுக்கு சற்று வித்தியாசமாக இருக்கும். பண்டிகை காலங்களில் நாம் வழக்கமாக செய்யும் பிரியாணிகளுக்கு மாற்றாக இதை நாம் செய்து சுவைக்கலாம். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.
ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:
இந்த செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணியில் சேர்க்கும் பாசுமதி அரிசி, மஷ்ரூம், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, நாம் சேர்க்கும் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், பிரியாணி இலை, இலவங்கப் பட்டை, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, ஜாதிப்பத்திரி, கிராம்பு, மற்றும் பெருஞ்சீரகம் இவை நன்கு தேங்காய் பால் சுவையோடு வெந்து மிக அற்புதமாக இருக்கும். இதை கட்டாயம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்பார்கள்.
சில குறிப்புகள்:
மஷ்ரூமை சேர்ப்பதற்கு முன்பாக பிரஷ்ஷாக நறுக்கி சேர்க்கவும். அப்படி சேர்த்தால் மஷ்ரூம் சுருண்டு விடாமல் நன்கு பிரஷ்ஷாக சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும்.
நன்கு வெள்ளை நிறமாக இருக்கும் மஷ்ரூம்களை மட்டுமே பயன்படுத்தவும். கருப்பாக இருந்தால் அதை அகற்றி விடவும்.
பாசுமதி அரிசியை சேர்ப்பதற்கு முன் உப்பு மற்றும் காரம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
இவ் உணவின் வரலாறு:
Biriani என்கின்ற சொல் Persian மொழியில் Birian என்கின்ற சொல்லிலிருந்து வருகிறது. பிரியாணி எவ்வாறு உதயமானது என்பதற்கு பலவிதமான வரலாற்று குறிப்புகள் இருக்கின்றன. பிரியாணி என்கின்ற சொல் வருவதற்கு முன்னே 2 A.D யில் தமிழ்நாட்டில் ‘ஊண் சோறு’ என்கின்ற பெயரில் மாமிசம், சோறு, நெய், கொத்தமல்லி, மஞ்சள் தூள், மற்றும் மிளகு தூள் கொண்டு செய்யப்படும் உணவு ராணுவப்படை வீரர்களுக்கு உணவாக அளிக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு பிரபல வரலாற்று குறிப்பு என்னவென்றால் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் ஒரு முறை படை வீரர்களை சந்தித்தபோது அவர்களின் ஆரோக்கியத்திற்காக ஒரு சிறப்பு உணவை மாமிசம் மற்றும் சாதம் கொண்டு தயாரிக்க சொன்னதாகவும் அதுவே பின்னாளில் பிரியாணியாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:
செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 20 லிருந்து 25 நிமிடம் பிடிக்கும்.
இதை சமைக்க சுமார் 25 லிருந்து 30 நிமிடம் எடுக்கும்.
செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணியை முழுமையாக சுமார் 50 நிமிடத்தில் இருந்து 55 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.
இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.
செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணியை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் சுமார் ரெண்டு நாள் வரை ஃபிரிட்ஜில் வைத்து சுட வைத்து உண்ணலாம்.
இதை ஒற்றிய உணவுகள்:
இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:
செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி செய்ய பயன்படுத்தும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.
நாம் இதில் பயன்படுத்தும் மஷ்ரூமில் புரத சத்து, இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை இதயம் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களுக்கு நல்லது.
இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
நாம் இதில் சேர்க்கும் தக்காளியில் பொட்டாசியம், விட்டமின் C மற்றும் Okay உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.
இதில் நாம் பயன்படுத்தும் தேங்காய் பாலில் புரத சத்து, இரும்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மற்றும் விட்டமின் C உள்ளது. இவை வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது.
இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி
செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி தென் தமிழகத்தில் ஒரு பிரபலமான உணவு. மணமான மற்றும் சுவையான இந்த செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி உங்களுக்கு ஒரு அற்புதமான உணவு உண்ணும் அனுபவத்தை ஏற்படுத்தும்.
தேவையான பொருட்கள்
- 500 grams மஷ்ரூம்
- 1 cup பாசுமதி அரிசி
- 1/2 cup வறுத்த வெங்காயம்
- 2 வெங்காயம்
- 2 தக்காளி
- 3 பச்சை மிளகாய்
- 2 cup தேங்காய்ப்பால்
- 3 tsp தயிர்
- 1 tsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 1/2 tsp மஞ்சள் தூள்
- 1 tsp மிளகாய் தூள்
- 1 tsp மல்லி தூள்
- 1/2 tsp மிளகு தூள்
- 1 tsp சீரக தூள்
- 1 பிரியாணி இலை
- 5 இலவங்கப் பட்டை
- 3 ஏலக்காய்
- 1 நட்சத்திர சோம்பு
- 2 ஜாதிப்பத்திரி
- 7 – 8 கிராம்பு
- 1/2 பெருஞ்சீரகம்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு புதினா
- தேவையான அளவு கொத்தமல்லி
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு நெய்
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
-
ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
-
இப்பொழுது வெங்காயத்தை நறுக்கி அதை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்.
-
அடுத்து இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.
-
பின்பு மஷ்ரூம்களை நறுக்கி அதை ஒரு bowl லில் போட்டு அதனுடன் நன்கு வறுத்து வைத்திருக்கும் வெங்காயம், அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 cup அளவு புதினா, 1 cup அளவு கொத்தமல்லி, உப்பு, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள், மற்றும் சீரக தூளை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் 30 நிமிடம் வரை ஊற விடவும்.
-
இப்பொழுது 2 வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாய்யை நறுக்கி, தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
-
அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 tsp அளவு எண்ணெய் மற்றும் 1 tsp அளவு நெய் விட்டு அதை சுட வைக்கவும்.
-
எண்ணெய் சுட்டதும் அதில் பிரியாணி இலை, இலவங்கப் பட்டை, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, ஜாதிப்பத்திரி, கிராம்பு, மற்றும் பெருஞ்சீரகத்தை போட்டு அதை கிளறி விடவும்.
-
பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை அதை வதக்கவும்.
-
வெங்காயம் பொன்னிறமானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து தக்காளி சற்று மசியும் வரை அதை வதக்கவும்.
-
தக்காளி மசிந்ததும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் மஷ்ரூம் கலவையை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக
-
விடவும்.
-
ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பால், 1/2 cup அளவு தண்ணீர், மற்றும் 1 tsp அளவு உப்பு சேர்த்து அதை நன்கு பக்குவமாக கிளறி விடவும்.
-
அடுத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து பக்குவமாக நன்கு கிளறி விட்டு மூடி போட்டு சுமார் 20 நிமிடம் வரை அதை வேகவிடவும்.
-
20 நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை சுமார் ஐந்து நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.
-
ஐந்து நிமிடத்திற்கு பிறகு செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணியை எடுத்து தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:
செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி செய்ய பாசுமதி அரிசியை தான் பயன்படுத்த வேண்டுமா?
இல்லை. உங்களுக்கு விருப்பம் என்றால் சீரக சம்பா அரிசி யையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணிக்கு உகந்த சைட் டிஷ் என்னென்ன?
- வெங்காய வெள்ளரிக்காய் ரைத்தா
- மசாலா கத்திரிக்காய்
- பன்னீர் 65
- மஷ்ரூம் மஞ்சூரியன்
- பன்னீர் டிக்கா
- கோபி மஞ்சூரியன்
செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணியை இன்னும் கூடுதலாக காரமாக்குவது எப்படி?
அவரவர் காரத்திற்க்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்களை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.
செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணியில் வேறு ஏதும் காய்கறிகளை நாம் சேர்க்கலாமா?
செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி இப்படியே சாப்பிடுவதற்கு அட்டகாசமாக இருக்கும். எனினும் உங்களுக்கு வேண்டுமென்றால் கேரட் மற்றும் பீன்ஸ்ஸை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி செய்ய நாம் பயன்படுத்தும் தேங்காய்ப்பாலை முந்தைய நாள் இரவே நாம் தயார் செய்து வைத்துக் கொள்ளலாமா?
கூடாது. பிரியாணி செய்வதற்கு முன்பாக தான் தயார் செய்ய வேண்டும்.
Leave a Reply